சீனாவில் ஜி20 தலைவர்கள்

ஹங்ஸோவ்: இந்தியாவும் சீனாவும் அக்கறைக்குரிய அம்சங்களை மதித்து இரு நாடுகளுக்கு இடை யிலான வேறுபாடுகளைக் கையாள் வதில் ஆக்ககரமாகச் செயல்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஸி ஜின் பிங் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி தனது வியட்நாம் பயணத்தை முடித்துக் கொண்டு 'ஜி20' மாநாட்டில் பங் கேற்பதற்காக சீனா வந்து சேர்ந் தார். ஹங்ஸே„வ் நகர விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது சீனாவின் ஹங்வ்ஸேவ் நகரில் நடைபெறும் 'ஜி20' உச்ச மாநாடு நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித் துப் பேசினர். அப்போது "இரு தரப்பு உறவு சீரான போக்கில் உள்ள நிலையில் இத்தகைய புரிந்துணர்வும் நம்பிக் கையும் தொடர வேண்டும்," என்று திரு மோடியிடம் திரு ஸி ஜின்பிங் சொன்னார். அதே சமயத்தில் சீன வெளியுறவு அமைச்சு, சீன- இந்திய உறவை தொடர்ந்து கட்டிக்காக்க இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட தமது நாடு தயாராக இருப்ப தாகவும் தெரிவித்தது. பிரதமர் மோடி உட்பட 'ஜி20' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களும் சீனா வந்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜாகோப் ஸுமா உள்ளிட்ட தலை வர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் (நடுவில்), 'ஜி20' உச்ச மாநாட்டில் பங்கேற்க வந்த இந்திய பிரதமர் மோடி (இடமிருந்து 2வது), பிரேசில் அதிபர் மிஷல் டெமர் (இடம்), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (வலமிருந்து 2வது), தென் ஆப்பிரிக்க அதிபர் ஜாக்கோப் ஸுமா (வலம்) ஆகியோருடன் குழுப்படத்தை எடுத்துக் கொள்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!