போதைப் பொருள் கடத்தல்; சென்னை வாலிபர் கைது

செபாங்: கோலாலம்பூர் அனைத் துலக விமான நிலையத்தில் 227,250 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த இந்திய நாட்டவர் ஒருவரை மலே சிய அதிகாரிகள் கைது செய் துள்ளனர். ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று விமான நிலையத்தில் உள்ள வருகையாளர் வாயிலுக்கு அருகே 46 வயது இந்திய நாட்டவர் கைதானார் என்று சுங்கத்துறை இயக்குநர் சிக் உமர் சிக் லிம் சொன்னார். "இந்தியாவின் சென்னை நகரிலிருந்து வந்த விற்பனை ஊழியரின் பெட்டி ஊடுகதிர் சோதனைக்கு உட்படுத்தப் பட்டது. அதனையடுத்து பெட்டியில் சந்தேகமான பொருட்கள் இருப் பது தெரிய வந்தது.

அதிகாரிகள் பெட்டியைத் தீவிரமாகச் சோதனையிட்டதில் ஒரு தனியிடத்தில் 5.05 கிலோ 'கிடாமைன்' போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது," என்றார் அவர். இவ்வாண்டு ஜூலை மாதம் அவர் மலேசியாவுக்கு முதன்முறையாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் போதைப் பொருள் எதையும் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் மலேசியாவின் சூழலை நோட்டமிடுவதற்காக அவர் வந்திருக்கலாம் என்று நம்பப்படு கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!