சிவராஜ்: அன்வாரை மகாதீர் பயன்படுத்திக் கொள்கிறார்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தமது அரசியல் உள் நோக்கத்திற்காக அன்வாரை பயன்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார் என்று மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் சாடியுள்ளார். பிரதமர் நஜிப்பைக் ஆட்சியிலிருந்து கவிழ்க்கும் நோக்கத்தில் மகாதீர் செயல் பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்றத்திற்கு மகாதீர் வந் திருந்தது குறித்து கருத்துரைத்த போது சிவராஜ் இவ்வாறு கூறினார்.

திரு மகாதீருக்கு சுய கௌரவம் இல்லையா? கொள்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பிய சிவராஜ், தமக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கு வர அன்வாருக்கு ஒழுக்க ரீதியாக தகுதி இல்லை என்று கூறிய மகாதீர் தற்போது தாழ்ந்து போவதற்கு என்ன காரணம் என்றும் வினவியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon