மலேசியாவில் ஸிக்கா கிருமி தொற்றிய முதல் கர்ப்பிணிப் பெண்

புத்ராஜெயா: மலேசியாவில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்தப் பெண் 27 வயதான சீனப் பெண் என்றும் இவர் நான்கு மாத கர்ப்பிணி என்றும் இவர் ஜோகூர் பாரு, ஜாலான் டேசா ஹார்மோனியில் வசிப்ப தாகவும் மலேசிய சுகாதார அமைச்சர் சுப்ரமணியம் சதாசிவம், செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தப் பெண்ணின் கணவர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார். அவர் அன்றாடம் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்பவர். அவரது கணவரிடமிருந்து அவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சோதனை முடிவுகள் இன்னும் தெரியவில்லை என்றும் அமைச்சர் சொன்னார். அந்தப் பெண்ணுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது முந்திய சோதனையில் தெரியவந்ததாகவும் திரு சுப்ரமணியம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!