கைரி: தேசிய முன்னணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் சந்தித்திருப்பதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இளையர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜாமாலுதின் கூறியுள்ளார். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதை நாம் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகளின் நடவடிக்கை குறித்து தேசிய முன்னணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி அடுத்த பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் எதிர்க்கட்சி சம்பந்தப்பட்ட வளர்ச்சி குறித்து நாம் அறிந் திருக்க வேண்டியது அவசியம் என்று அம்னோ இளைஞர் பிரிவின் தலைவருமான திரு கைரி கூறினார். மகாதீர்=அன்வார் சந்தித்தது பற்றி கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார். மகாதீர் மற்றும் முகைதின் யாசின் தலைமையிலான புதிய கட்சி, அம்னோவுக்கு மிரட்டலாக விளங்குமா என்பது பற்றி அவர் எதுவும் கருத்து தெரிவிக்க வில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!