ஹில்லரி நிமோனியாவால் பாதிப்பு

நியூயார்க்: அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டி யிடும் ஹில்லரி கிளிண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது கலிபோர்னியா தேர்தல் பிரசாரக்கூட்டம் ரத்து செய்யப் பட்டது. செப்டம்பர்-11 தாக்குதல் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து "கலிபோர்னியாவுக்கு ஹில்லரி செல்ல மாட்டார்," என்று அவரது பேச்சாளர் நிக் மெரில் கூறினார். நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற 68 வயது ஹில்லரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார். அவரது உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட்டது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். வாகனத்தில் ஏற முடியாமல் தடுமாறிய அவருக்-கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உதவி செய்தனர். சில நாட்களுக்கு முன்பு எதிர்க் கட்சி வேட்பாளரான டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர்களை அவர் கடுமையாகச் சாடியிருந்தார். பின்னர் தமது விமர்சனத்தை ஹில்லரி மீட்டுக்கொண்டார்.

டோனல்ட் டிரம்ப் ஆதரவாளர் களில் பாதிப் பேர் கண்டனத்துக்கு உரியவர்கள் என்று ஹில்லரி குறிப்பிட்டிருந்தார். இதன் பிறகு தேர்தல் பிர சாரத்துக்குத் திரும்பிய அவர் செப்டம்பர்-11 நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேன்ஹாட்டனில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் முன்னைய வெளியுறவு அமைச்சரான ஹில் லரி கிளின்டன் சுமார் 90 நிமிடங் கள் செலவழித்தார். தாக்குதலில் மாண்டவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!