ஹில்லரி: விரைவில் பிரசாரம் செய்வேன்

வா‌ஷிங்டன்: நிமோனியா காய்ச் சலால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளின்டன் தற்போது ஓய்வு எடுத்துவரும் வேளையில் தனது உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள் ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள் தான் மீண்டும் பிரசாரம் செய்ய விருப்பதாக ஹில்லரி தெரிவித் துள்ளார். சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தனது உடல்நிலை தற்போது தேறியிருப்பதை தான் உணர்வதாக ஹில்லரி கூறினார்.

ஓய்வு இல்லாமல் சுறுசுறுப்பாக பல செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்படக்கூடிய சாதாரண உடல் நிலை பாதிப்புதான் இது என்றும் அவர் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியின்போது சுகவீனம் அடைந்த ஹில்லரி கிளின்டன், தற்போது தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். உடலில் நீர் சத்து குறைவால் தனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட தகவலை முதலில் வெளி யிடாததற்கு காரணம் அதனை ஒரு பெரிய பிரச்சினையாக தான் கருதாததுதான் என்று அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளின்டன். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!