தைவானில் சூறாவளி; இருளில் மூழ்கிய வீடுகள்

தைப்பே: தைவானைத் தாக்கும் சூறாவளிக் காற்றினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றில் பல மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 200,000 குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவிக்க நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர். கடும் சூறாவளியால் உள்ளூர் மற்றும் அனைத்துலக விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான உள்ளூர் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சக்திவாய்ந்த 'மிரன்டி' எனும் சூறாவளி தைவானின் தென் பகுதி மற்றும் கிழக்குப் பகுதி நகரங்களை அச்சுறுத்துவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்றினால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இப்போது வீசும் இந்த சூறாவளி இந்த ஆண்டில் உலகின் ஆக சக்திவாய்ந்த சூறாவளியாகக் கருதப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங் களில் பல நிறுவனங்களின் அலுவலகங்கள் மூடப்பட்டன. பல பள்ளிக்கூடங்களும் மூடப் பட்டன. பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 1,500 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரி கள் கூறினர். சூறாவளிக் காற்றுடன் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அவதிப்பட நேர்ந்துள்ளது.

நேற்று கடுமையாகத் தாக்கத் தொடங்கிய சூறாவளி இன்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரித் துள்ளனர். இந்த சூறாவளி பின்னர் சீனாவை நோக்கி வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா வின் குவாங்டோங், ஃபூஜியன் ஆகிய மாநிலங்கள் இந்த சூறாவளியால் பாதிக்கப்படக் கூடும் என்று ஊடகத் தகவல்கள் கூறின. இந்த வாரத்தில் மற்றொரு புயல் தைவானை தாக்கும் என்று முன்னுரைக் கப்பட்டுள்ளது.

தைவானில் மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியபோது பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 200,000 குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவிக்க நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த ஆண்டில் வீசும் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி இது என்று கூறப்பட்டது. பல இடங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. உள்ளூர் மற்றும் அனைத்துலக விமானச் சேவைகளும் சூறாவளியால் பாதிக்கப்பட்டன. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!