நீதித்துறை அதிகாரியைச் சுட்டுக்கொன்றதாக பிலிப்பீன்ஸ் அதிபர் மீது குற்றச்சாட்டு

பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே 1993ஆம் ஆண்டு நீதித்துறை ஊழியர் ஒருவரைச் சுட்டுக்கொன்றதாகவும் தனது எதிரிகளைக் கொல்ல உத்தரவிட்ட தாகவும் 'கொலைப் படை'யைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். எட்கர் மாட்டோபாட்டோ, 57, எனும் அந்த ஆடவர், தாமும் போலிஸ் குழு ஒன்றும் முன்னாள் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களும் டுட்டெர்ட்டேவின் உத்தரவின்படி கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 1,000 பேரைக் கொன்றுள்ளதாக நாடாளுமன்ற செனட் விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் உயிருடன் முதலைக்கு உணவானதாகவும் மற்றவர்கள் கழுத்து நெரிக்கப் பட்டும் கொளுத்தப்பட்டும் கண்டந் துண்டமாக வெட்டப்பட்டும் கொல் லப்பட்டதாக எட்கர் கூறினார். 'கொலைப்படை'யில் இருந்த ஒரு போலிஸ் அதிகாரிக்குச் சொந்தமான கற்சுரங்கத்தில் பெரும்பாலானோரின் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும் மற்றவை கடலில் வீசப்பட்டு மீன்களுக்கு உணவாக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். பிலிப்பீன்ஸ் அதிபராக டுட்டெர்ட்டே பதவியேற்று 72 நாட் களில் 'குற்றங்களுக்கு எதிரான போர்' என்று கூறிக்கொண்டு 3,140 பேரை போலிசார் கொன்றுள் ளதாகக் கூறப்படுகிறது. நீதிக்குப் புறம்பான இந்தக் கொலைகள் குறித்து விசாரித்து வரும் செனட்டின் முன்பாக டுட்டெர்ட்டே தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எட்கர்.

டுட்டெர்ட்டே 20 ஆண்டுகளுக்கும் மேல் டாவோ நகரின் மேயராக இருந்தபோது ஆயிரம் பேருக்கு மேல் கொன்ற 'கொலைப் படை' யின் பின்னால் அவர் இருந்தார் என நீண்டகாலமாகவே குற்றச் சாட்டுகள் எழுந்துவந்த நிலையில் எட்கர் இந்த அதிர்ச்சித் தகவல் களை வெளியிட்டுள்ளார்.2016-09-16 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!