‘சூச்சி வருகையால் தடைகள் விலகும்’

வா‌ஷிங்டன்: மியன்மாரின் ஆங் சான் சூச்சி தமது நாட்டுக்கு விதிக்கப்பட்ட பொருளியல் தடைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்குப் பதில் அளித்த அதிபர் ஒபாமா அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார். ஆங் சான் சூச்சி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார். பொருளியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அனைத்துத் தடைகளையும் அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று சூச்சி தெரிவித்தார். மியன்மாரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள் வதற்காகப் பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டு நெருக்கடி தர அமெரிக்கா ஆதரவு அளித்ததை சூச்சி சுட்டிக் காட்டினார்.

வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவுடன் கைகுலுக்கும் மியன்மாரின் ஆங் சான் சூச்சி. படம்: ஈபிஏ

Loading...
Load next