பாக். ரயில் மோதலில் அறுவர் மரணம்; 150 பேர் காயம்

முல்டான்: பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப் பட்டனர் என்றும் 100க்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்த னர். முல்டான் நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. நேற்று விடியற்காலை 2.30 மணி அளவில் கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அவாமி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது. முன்னதாக தண்டவாளத்தைக் கடந்துகொண்டிருந்த ஒருவர் மீது ஏறியதால் சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் அதன் மீது மோதியது. “நான்கு பேர் இறந்துவிட்டனர். காயம் அடைந்தவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்று உள்ளூர் மாவட்ட நிர்வாக அதிகாரி நதீர் சாட்டா செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். காயம் அடைந்த பயணிகளின் எண்ணிக்கை 100க்கு மேல் தாண்டிவிட்டது என்று மீட்புப் பணி உதவியாளர் ஒருவர் கூறினார். தடம் புரண்டு, சாய்ந்து, நசுங்கிக் கிடந்த ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்புப் பணியாளர்களும் குடியிருப்பாளர் களும் மீட்டு வெளியே கொண்டு வருவதைத் தொலைக்காட்சி படங் களில் பார்க்க முடிந்தது. ஹஜ்ஜுப் பெருநாளுக்கான மூன்று நாள் விடுமுறை புதன் கிழமையோடு முடிந்த நிலையில் பலர் நகரங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

பாகிஸ்தானில் உள்ள முல்டான் நகருக்கு அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டன. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next