துருக்கியில் பிரிட்டிஷ் தூதரகம் நேற்று மூடப்பட்டது

இஸ்தான்புல்: பாதுகாப்பு காரணத்திற்காக துருக்கியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் நேற்று மூடப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்காராவில் உள்ள அத்தூதரகம் ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூடப்பட்டிருந்தது. இஸ்லாமிய மற்றும் குர்தியப் போராளிகள் துருக்கியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் துருக்கிய அதிகாரிகள் நான்கு சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறின. ஆனால் அந்த நால்வருக்குப் பயங்கரவாதச் குழுக்களுடன் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Loading...
Load next