தென்சீனக் கடல் பகுதியில் ஜப்பானின் ஈடுபாடு

வா‌ஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் ஜப்பான் அதன் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த விருப்பதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் டோமோமி இனடா கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வா‌ஷிங்டனில் கொள்கை, ஆய்வுக் கழகத்தில் உரையாற்றிய போது சர்ச்சைக்குரிய அந்தக் கடல் பகுதியில் ஜப்பானின் ஈடுபாடு பற்றிக் கூறினார். அமெரிக்காவுடன் சேர்ந்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவ தன் மூலமும் வட்டார நாடுகளின் கடற்படைகளுடன் சேர்ந்து பலதரப்பு பயிற்சிகளில் ஈடுபடுவ தன் மூலமும் தென்சீனக் கடல் பகுதியில் ஜப்பான் அதன் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த விருப்பதாக திருவாட்டி இனடா கூறினார்.

தென்சீனக் கடல் பகுதி விவகாரத்தில் ஜப்பான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சீன அதிபர் சி ஜின்பிங் கூறிய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் திருவாட்டி இனடா இவ்வாறு கூறினார். அமெரிக்கக் கடற்படையின் சுதந்திரமான கடல் பயணத்தை ஜப்பான் வலுவாக ஆதரிக்கிறது என்றும் அவர் சொன்னார். தென் சீனக் கடல் பகுதியில் கடலோர மாநிலங்களை அமைப்பதற்கு ஜப்பான் உதவும் என்றும் அவர் கூறினார். வியட்னாமிற்கு புதிய சுற்றுக்காவல் கப்பல்களை வழங் கவும் ஜப்பான் தயாராக உள்ளது.

Loading...
Load next