பிரிட்டன் வெளியேற்றம்; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேச்சு

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் முறையான பேச்சைத் தொடங்கக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அதுகுறித்த பேச்சை பிரிட்டன் தொடங்கக் கூடும் என்று திருவாட்டி திரேசா மே தம்மிடம் கூறியதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டோனல்ட் டஸ்க் தெரிவித் துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பி லிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து அது பற்றிய பேச்சு இந்த ஆண்டு தொடங்காது என்று பிரதமர் திரேசா மேயின் அலுவலகம் தெரிவித்திருந்தது. அதே சமயம் அதுபற்றிய பேச்சு எப்போது தொடங்கும் என்பது பற்றி பிரதமர் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் விலகுவது அந்த அமைப்புக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என்று கூறப்பட்ட போதிலும் அந்த அமைப்பு தொடர்ந்து வலுவான தாக விளங்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கூறியுள் ளார்.

Loading...
Load next