விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் கைது

கோத்தா கினபாலு: புருணை செல்லவிருந்த ஒரு விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் ஒருவர் மலேசியாவில் கோத்த கினபாலு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சுமார் 62 வயதான பயணி ஒருவர் நேற்று காலை 8.40 மணியளவில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர் ஒருவர் அவரிடம் பயண ஆவணங்களைக் கேட்டிருக்கிறார்.

அப்போது அந்தப் பயணி "உங்கள் விமானத்தை கடத்தப் போகிறேன்," என்று அந்த ஊழியரிடம் கூறியதாகவும் அதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் அதுபற்றி விமானியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். விமான நிலைய போலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட அந்தப் பயணியிடம் போலிசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது. மேலும் விசாரணைக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!