பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்

பிரெஞ்சு அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் மோட்டார் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை போலிசார் கைது செய்தனர். பாரிஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 13,000 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் கடந்த 6 மாதங்களில் 14வது முறையாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

Loading...
Load next