மின்­ன­சோட்டா கடைத்தொகுதியில் 8 பேருக்கு கத்திக்குத்து

மின்­ன­சோட்டா: தனியார் பாது­கா­வ­லர் சீருடை­ய­ணிந்த ஒருவர் மின்­ன­சோட்­டா­வில் உள்ள கடைத்­தொ­குதி ஒன்றில் எட்­டுப்­பேரை கத்­தி­யால் குத்­தினார். ஓய்வில் இருந்த போலிஸ் அதிகாரி ஒருவர் அவரை சுட்டுக் கொன்றார். 'கிராஸ்­ரோட்ஸ் சென்டர்' கடைத்­தொ­கு­தி­யில் நேற்று முன்தினம் வாடிக்கை­யா­ளர்­கள் நிரம்­பி­யி­ருந்த இரவு வேளையில் இந்தச் சம்ப­வம் நடந்த­தா­கக் கூற­ப்பட்­டது. காய­முற்ற அனை­வ­ரும் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். காய­முற்­ற­வர்­களின் உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் இல்லை எனவும் அவர்­கள் தேறி­வ­ரு­வ­தா­க­வும் மருத்­து­வ­மனை­யின் தொடர்பு நிபுணர் கிரிஸ் நெல்சன் சொன்னார்.

கத்­தி­யால் குத்திய நபர் தனி­யா­கச் செயல்­பட்­ட­தாக அந்தப் பகு­தி­யின் போலிஸ் தலைவர் வில்­லி­யம் பிளேர் ஆண்டர்­சன் கூறினார். அது பயங்க­ர­வாதத் தாக்­கு­தலா என்பது பற்றிய உறு­தி­யான தக­வல்­கள் இல்லை என்றார் திரு ஆண்டர்­சன். கத்­திக்­ குத்­துக்­கான நோக்­கத்தை அறியவும் சம்பவத்தின் பின்னணியை அறியவும் விசாரணை மேற்­கொள்­ளப் ­பட்­டுள்­ளது. நண்­பர்­களு­டன் கடைத்­ தொ­கு­திக்­குச் சென்­றி­ருந்த மாணவர் ஒருவர் கத்­திக்­குத்து சம்ப­வம் பற்றி விவ­ரித்­தார். ஒரு­வ­ரது முகத்­தி­லும் மற்­ற­வ­ரது முது­கி­லும் கத்­திக்­குத்­தால் ரத்தம் வழிந்­தோ­டி­யதைக் கண்ட­தா­க அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!