சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஐஎஸ்ஐஎஸ்

பெய்ரூட்: சிரி­யா­வின் கிழக்குப் பகுதியில் சிரியாவின் போர் விமானம் ஒன்றை ஐஎஸ் பயங்க­ர­வாத அமைப்பு சுட்டு வீழ்த்­தி­ய­தாக ஐஎஸ் அமைப்­பின் செய்தி நிறு­வ­ன­மான அமாக் தனது இணை­யப்­பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது. சிரியாவின் பிரச்­சினை­களை ஆறு ஆண்­டு­க­ளா­கக் கண்­ கா­ணித்து வரும் மனித உரிமை கண்­கா­ணிப்­புக் குழு, அந்த போர் விமா­னத்தை ஓட்டிச் சென்ற விமானி கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளது. சுடப்­பட்ட விமானம் ஜெபெல் தர்டா பகு­தி­யில் விழுந்த­தாக சிரிய அர­சாங்கத்­தின் ராணுவ விமானத் தளத்தைப் பார்வை­யிட்டு வரும் அந்தக் கண்­கா­ணிப்­புக் குழு குறிப்­பிட் டுள்ளது. நேற்று முன்­தி­னம் அமெ­ரிக்கா தலைமை­யி­லான கூட்டணி நடத்­திய ஆகாயத் தாக்­கு­த­லில் பல சிரிய படை­வீ­ரர்­கள் கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறப்­படு­வது ஜெபர் தார்டா பகு­தி­யில்­தான் என்பது குறிப்­ பி­டத்­தக்­கது. அமெ­ரிக்­கா­வின் அந்தத் தாக்­கு­தல் கார­ண­மாக அமெ­ரிக்கா, ரஷ்யா இடையே பதற்­றம் அதி­க­ரித்­துள்­ள­தால் அவ­ச­ரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்­யு­மாறு ஐநா பாது­காப்பு மன்றத்தை ரஷ்யா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஐஎஸ் அமைப்­பின் தளம் என்று சந்­தே­கப்­பட்ட இடத்­தில் அமெ­ரிக்கா தலைமை­யி­லான கூட்டணி நேற்று முன்­தி­னம் ஆகாயத் தாக்­கு­தல் நடத்­தி­யது. ஆனால், அந்தத் தாக்­கு­தல் சிரிய ராணுவ வீரர்­கள் மீதானது எனவும் அதில் 60க்கும் அதி­க ­மான சிரிய வீரர்­கள் இறந்­து­போ­னது பற்­றி­யும் அமெ­ரிக்­கா­வுக்­கு ரஷ்யா தெரி­வித்­தது. அதனை அடுத்து கூட்டுப் படை­யி­னர் தாக்­கு­தலை நிறுத் தினர். இருப்­பி­னும், அமெ­ரிக்கா வின் மீது ரஷ்யா கடும் கோபம் கொண்டது. "மிகவும் பயங்க­ர­மான உண்மை ஒன்றை உல­குக்கு தெரி­விக்­கி­றோம். ஐஎஸ் அமைப்பை அமெ­ரிக்கா தற்­காக்­கிறது. இப்போது அது சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது," என ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் மரியா ஸக்காரோவா குறிப்­பிட்­ட­தாக செய்­தி­கள் வெளி­யா­கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!