மலேசியப் பிரதமரின் மனைவி ரோஸ்மாவுக்கு ஐநா விருது

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், 64, (படம்: ஏஎஃப்பி) ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’வின் ‘எடுத்துக்காட்டாக வாழ்பவர்’ எனும் பொருள்படக்கூடிய ‘லீட் பை எக்சாம்பள்’ என்ற விருதைப் பெறவிருக்கிறார். ஐநா பொதுச் சபையின் 71வது கூட்டத்தின் ஓர் அங்கமாக, எதிர்வரும் வியாழக்கிழமை நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் திருமதி ரோஸ்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மலேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா குறிப்பிட்டுள்ளது. சிறுவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திருவாட்டி ரோஸ்மா மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பெர்மாட்டா’ எனும் பாலர்பருவ மேம்பாட்டுத் திட்டம் செயல்பட மூல காரணமாக இருந்தவர் திருமதி ரோஸ்மா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...
Load next