‘விடுதலை அல்லது வீட்டுக்காவல்’

கோலாலம்பூர்: ஓட்­டு­நர் சைஃபுல் அன்வார் புகா­ரி­யு­டன் இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் உறவு கொண்ட­தற்­கா­கத் தற்போது சிறையில் இருக்­கும் அன்வார் இப்­ரா­கிமை குற்­ற­மற்­ற­வர் என விடு­விப்­ப­தற்­கான முயற்­சி­களை அவரது வழக்­க­றி­ஞர் குழு மேற்­கொண்­டுள்­ளது. அது சாத்­தி­ய­மா­கா­த­போது அவ­ருக்கு வீட்­டுக்­கா­வல் விதிக்­கு­மாறு நீதி­மன்றத்­தில் அவர்­கள் கோரிக்கை வைக்க இருப்­ப­தாக 'வீக்­கெண்ட் ஆஸ்­தி­ரே­லி­யன்' சஞ்சிகை தெரி­வித்­துள்­ளது. வீட்­டுக்­கா­வ­லுக்கு மலேசிய சட்­டத்­தில் அனுமதி உண்டு. அடுத்த மாதம் 12ஆம் தேதி நடை­பெ­ற­வி­ருக்­கும் சட்ட மறு­ ஆய்­வின்­போது, அன்வார் மீதான குற்­றச்­சாட்­டுக்கு மரபணு ஆதாரம் இல்­லா­ததை­யும் சைஃபுல் அன்வார் புகா­ரி­யின் வாக்­கு­மூ­லம் முன்­னுக்­குப் பின் முரணாக இருந்ததை­யும் அவரது வழக்­க­றி­ஞர்கள் வலி ­யு­றுத்தி அவரது விடு­தலைக்­காக வாதி­டக்­கூடும் என அமெ­ரிக்க வழக்­க­றி­ஞர் கிம்பர்லி மோட்லி கூறி­யுள்­ளார்.

அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள மறு ஆய்­வு­தான் அன்வார் மீதான குற்­றச்­சாட்டை பொய்ப்­பிக்க சட்­ட­ரீ­தி­யான இறுதி நட­வ­டிக்கை­யாக இருக்­கும். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் அன்­வா­ருக்கு ஐந்து ஆண்­டு­கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அன்வார் மீதான தீர்ப்பு அர­சி­யல் நோக்­கத்­து­டனா­னது என்று பல தரப்­பி­ன­ரா­லும் குறிப்­பி­டப்­பட்­டது. அன்­வா­ருக்கு அநி­யா­யம் இழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மிகவும் வலுவாக உணர்ந்த­தால் இந்த வழக்கை எடுத்­துக்­கொண்ட­தாக மனித உரிமை­கள் பிரிவில் நிபு­ணத்­து­வம் பெற்ற திரு­வாட்டி மோட்லி கூறி­யுள்­ளார். அன்­வாரைச் சந்­திக்­க­வும் எதிர்­கா­லத்­தில் வழக்­கு­களில் அவ ­ருக்கு ஆத­ர­வாக வாதி­ட­வும் விருப்­பம் கொண்­டுள்­ள­தாக மோட்லி குறிப்­பிட்­டார். அன்வாரை சுங்கை புலோ சிறையில் சந்­தித்த அவர், அன்வார் மிகவும் களைப்­பாக இருப்­ப­தா­க­வும் சட்ட மறு ஆய்வை ஆவ­லு­டன் எதிர்­பார்த்து இ­ருப்­ப­தா­க­வும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!