முஷாரப்பின் சொத்துகள் பறிமுதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் சொத்துகளை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இவ்வாண்டு மார்ச் மாதத்தில் துபாய் சென்ற முஷாரப் மீது, அவர் அதிபராக இருந்தபோது மேற்கொண்ட செயல்பாடுகள் பலவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. பள்ளிவாசல் ஒன்றில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையின் தொடர்பில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை பாகிஸ்தானுக்கு வர வழைக்குமாறு உள்துறை அமைச்சிடம் வலியுறுத்தப்போவ தாகவும் வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பூட்டோவின் கொலை உட்பட முஷாரப் மீதான நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Loading...
Load next