ஜப்பானில் மலாகாஸ் சூறாவளி; 114,000 வீடுகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு

தோக்கியோ: சக்திவாய்ந்த மலாகாஸ் புயல் ஜப்பானை நேற்று கடுமையாகத் தாக்கியது. இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் தெற்குப் பகுதிகளிலுள்ள போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்காற்று ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்புக்குள்ளாக்கியது. மியாஸக்கி தொகுதியைச் சேர்ந்த நகரங்களில் வாகனங்கள், வீடுகள், நெற்பயிர்கள் ஆகியன வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகளை அந்நாட்டின் என்எச்கே தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அப்பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 578 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிகிறது. காகோ‌ஷிமா நகரில் பாலம் ஒன்று வெள்ளத்தால் அடித்துச் சல்லப்பட்டுள்ளது. வாகனங்களும் பாதசாரிகளும் சாலைகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை