நியூயார்க் குண்டு வெடிப்பு; அகமது கான் மீது குற்றச்சாட்டு

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் குண்டு வைத்ததாக ஆப்கானில் பிறந்த 28 வயது அகமது கான் ரஹமி மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சென்ற வாரம் சனிக்கிழமை நியூயார்க், மேன்ஹாட்டன் பகுதி யில் குண்டு வெடித்ததில் 31 பேர் காயம் அடைந்தனர். நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி குண்டு வெடிப்புக்குப் பின்னர் ரஹமி திங்கட்கிழமை நியூ ஜெர்சியில் கைது செய்யப்பட்டார். போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தகவல்கள் கூறின. போலிசாரை கொலை செய்ய முயன்றதாக ரஹமி மீது ஏற்கெனவே குற்றம் சாட்டப் பட்டுள்ளது. பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தியது, குண்டு வைத்ததன் மூலம் பெரும் சொத்து சேதத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட மேலும் பல குற்றச் சாட்டுகள் ரஹமி மீது சுமத்தப் பட்டுள்ளன.

ரஹமி கைது செய்யப் பட்டபோது அவரிடமிருந்து ஒரு குறிப்புப் புத்தகத்தை போலிசார் கைப்பற்றினர். பயங்கரவாதி ஒசாமா பின் லாடன் மற்றும் அனைத்துலக பயங்கரவாதிகளால் ரஹமி ஈர்க்கப்பட்டதை அந்தப் புத்தகத் தில் காணப்பட்ட குறிப்புகள் உணர்த்துவதாக நீதிமன்றத்தில் போலிசார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. ரஹமியின் வெளிநாட்டுப் பயணம் ஏற்கெனவே கண்காணிக் கப்பட்டுவந்த நிலையில் ரஹமி அடிக்கடி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானுக்கு சென்று திரும்பி யதாக ஊடகத் தகவல்கள் கூறின. 2016-09-22 06:00:00 +0800

Loading...
Load next