இந்தோனீசியாவில் வெள்ளம்; நிலச்சரிவு

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட குறைந்தது 19 பேர் உயிரிழந் ததாகவும் இன்னும் சிலரைக் காணவில்லை என்றும் அதிகாரி கள் கூறியுள்ளனர். மேற்கு ஜாவாவில் உள்ள காருட் பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அப்பகுதி யில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் பல இடங்களில் தண்ணீர் 2 மீட்டர் உயரம் அளவுக்கு தேங்கியிருந்ததாகவும் தேசிய பேரிடர் அமைப்பின் பேச்சாளர் சுடோபோ பூர்வோ நக்ரோஹோ கூறினார்.

அங்குள்ள ஓர் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதில் மேலும் பலர் உயிரிழந்ததாகவும் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் காயம் அடைந்ததாகவும் சுடபோ பூர்வோ கூறினார். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் வீடுகளை இழந்த சுமார் 1,000 பேருக்கு உதவும் வகையில் தற்காலிக முகாம்களும் அவசரகால தங்கும் இடங்களும் அமைக்கப்பட்டன. கனமழை காரணமாக மேற்கு ஜாவா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மண்ணில் புதையுண்டதாகவும் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் சுடபோ கூறினார்.

மேற்கு ஜாவாவில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பேரிடரில் 50 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்தோனீசியாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற் படுவது புதிதல்ல என்ற போதிலும் இதுபோன்ற பேரிடர்களால் இந்தோனீசிய மக்கள் ஆண்டு தோறும் பாதிப்படைகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக வரும் மாதங்களில் இங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று இந்தோனீசியாவின் தேசிய பேரிடர் அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை