ஜோகூரில் தாயும் மகளும் கொலை; 8 பேர் கைது

ஜோகூர்பாரு: ஜோகூரில் தாமான் புத்ரி வங்சா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தாயும் அவரது 16 வயது மகளும் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் 8 பேரை கைது செய்திருப்பதாக மாநில போலிஸ் படைத் தலைவர் வான் அகமது நஜிமுதின் முகம்மது கூறினார். கைது செய்யப்பட்ட அந்த 8 பேரில் இருவர், விரைவு பேருந்து மூலம் கோலாலம்பூருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக வான் அகமட் கூறினார். அவ்விருவரிடமிருந்து போலிசார் சில பொருட்களைக் கைப்பற்றினர். அந்தப் பொருட்கள் கொலை செய்யப்பட்ட மாது மற்றும் அவரது மகளின் பொருட் களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக போலிசாருக்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஐந்து பேர் புதன்கிழமை பெலாங்கி இண்டா பகுதியில் கைது செய்யப்பட்டனர். எட்டாவது சந்தேக நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தாமான் புத்ரி வங்சா, ஜாலான் பெலாடு 40, பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் 56 வயதான எம். மாரியாயியும் அவரது மகள் துர்காவும் இறந்து கிடந்ததாகவும் அவர்களின் உடம்பில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்ட தாகவும் திரு வான் அகமட் கூறினார். தாயும் மகளும் இறந்து கிடந்ததைப் பார்த்த துர்காவின் சகோதரர் சி. பிரபாகரன் அது குறித்து முதலில் அவரது தந்தைக்கும் பின்னர் போலி சாருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டில் ஐந்து பேர் வசித்து வந்ததாக பிரபாகரன் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!