அமெரிக்க நகரில் அவசரநிலை அறிவிப்பு

சார்லட்: வடகரோலினாவில் உள்ள சார்லட் நகரில் கறுப்பின ஆடவர் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு 2=வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக் கும் வேளையில் போலிசாருக் கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் அதிகரித் துள்ளது. இதனால் சார்லட் நகரில் அவசரநிலை நடப்பில் இருப்பதாக வடகரோலினா ஆளுநர் பாட் மெக்ரோரி அறிவித் துள்ளார். சார்லட் நகரில் செவ்வாய்க் கிழமை இரவு கெய்த் லாமோண்ட் ஸ்காட் என்ற 43 வயது கறுப் பினத்தவரை போலிசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் மூண்டன. துப்பாக்கியைக் கீழே போடுமாறு போலிசார் விடுத்த உத்தரவை ஸ்காட் அலட்சியம் செய்ததாக கூறப்படும் வேளையில் அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று ஸ்காட்டின் குடும்பத்தினர் தெரி வித்துள்ளனர்.

Loading...
Load next