யாஹூவில் ஊடுருவல்: 500 மில்லியன் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு

நியூயார்க்: யாஹூவைப் பயன் படுத்துகின்ற 500 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப் பட்டுள்ளன. கணினி ஊடுருவல் பேர்வழிகள் அத்தகவல்களை திருடிச் சென்றதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. யாஹூ பயனீட்டாளர்களின் பெயர்கள், முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், கைத் தொலைபேசி எண்கள், பிறந்த தேதிகள் மற்றும் கடவுச் சொல் உள்ளிட்ட அனைத்துத் தனிப் பட்ட தகவல்களும் களவாடப் பட்டுள்ளன. எனினும் கடன் பற்று அட்டை விபரங்கள் களவாடப்படவில்லை என யாஹூ அறிவித்திருக்கிறது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்களின் கடவுச் சொல்லை மாற்றாமல் வைத்திருப்பவர்கள், அதனை மாற்றிக் கொள்வது நல்லது என்று யாஹூ பயனீட் டாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இது தனிப்பட்ட நோக்கத்தை கொண்ட களவாடல் அல்ல என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாஹூ ஊடுருல் குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்து வருகிறது. இப்படியொரு ஊடுருவல் நடந்திருக்கிறது என்ற விஷயமே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அம்பலத்திற்கு வந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள். படம்: ஓமான நாட்டு குடிமைத் தற்காப்பு மற்றும் அவசர சிகிச்சை வாகனப் பிரிவு, காணொளி: PACDAOman

14 Nov 2019

ஆறு இந்திய ஊழியர்கள் மரணம்; ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர்

வெனிஸ் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அந்நகரின் மேயர் லுய்கி பிரக்னாரோ பார்வையிடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

14 Nov 2019

வெனிசில் கடும் மழை; அவசரநிலையை அறிவித்தார் நகர மேயர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அருகே புதர்த் தீ வேகமாகப் பரவி வரும் வேளையில், இந்த மாது தமது மகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுகிறார். படம்: இபிஏ

14 Nov 2019

புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்