வா‌ஷிங்டன்: துப்பாக்கிச்சூடு, நால்வர் பலி

லாஸ் ஏஞ்ச­லிஸ்: வா‌ஷிங்­ட­னில் உள்ள ‘கேஸ்கேட்’ கடைத் தொகு­தி­யில் நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்டில் நான்கு பெண்கள் பலி­ யா­கி­னர். மேலும், ஒரு ஆடவர் காய­முற்­றார். துப்­பாக்­கிக்காரனை போலிசார் தேடி வரு­கின்ற­னர். இந்த சம்ப­வத்­தில் ஒரு நபர் மட்டுமே துப்­பாக்­கிச்­சூ­ட்டில் ஈடு­பட்­ட­தாக போலிஸ் பேச்­சா­ளர் கூறி­யுள்­ளார். கடைத்­தொ­கு­தி­யில் உள்ள துணிக்­கடை ஒன்­றுக்­குள் துப்­பாக்கி ஏந்திய இளம் ஆடவர் சென்றது கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்­படை­யில் அந்த நபர் தேடப்­படு­கிறார்.

‘கேஸ்கேட்’ கடைத்­தொ­கு­தி­யில் துப்­பாக்­கிச்­சூடு நிகழ்­வ­தாக சிங்கப்­பூர் நேரப்­படி நேற்று காலை 6.58 போலி­சா­ருக்கு தகவல் அளிக்­கப்­பட்­டது. போலிசார் அவ்­வி­டத்­துக்­குச் செல்­வதற்கு முன்பாக அந்த நபர் விரைவுச் சாலை ஒன்றின் வழியாக வெளியேறியதும் காணொ­ளி­யில் பதிவாகி உள்ளது. கடைத்­தொ­கு­தி­யில் இருந்த அனை­வ­ரும் பாது­காப்­பாக அரு கில் இருந்த தேவா­ல­யத்துக்கு அனுப்­பி வைக்­கப்­பட்­ட­னர். கடைத்­தொ­கு­தியைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் அதி­கா­ரி­கள் தேடுதல் பணியை முடுக்­கி­விட்­ட­னர். பல அம­லாக்­கப் பிரிவு அதி­கா­ரி­கள் சந்தேக நபரைத் தேடும் பணியில் ஈடு­படுத்­தப்­பட்­டுள்­ள­னர். மோப்ப நாய்­களும் பணியில் பயன்­படுத்­தப்­படு­கின்றன. மேலும் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் வசிக்கும் குடிமக்கள் வெளியே வரவேண்டாம் என போலிசார் எச்சரித்துள்ளனர்.

Loading...
Load next