குண்டுமழையால் தவிடுபொடியாகும் கிழக்கு அலெப்போ

அலெப்போ: சிரி­யா­வில் போரா­ளி­கள் வச­மி­ருக்­கும் கிழக்கு அலெப்போ பகு­தி­யில் சிரியா, ரஷ்யா ஆகியவற்றின் போர் விமா­னங்கள் இரண்டா­வது இரவாக நேற்றும் குண்­டு­மழை பொழிந்தன. அலெப்போ நகரின் கிழக்­குப் பகுதியை போரா­ளி­களி­ட­மி­ருந்து மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யாக இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் இரவு மேற்­கொள்­ளப்­பட்ட கோரத் தாக்­கு­த­லில் சிக்கி குறைந்தது 47 பேர் மாண்­டு ­போ­யி­னர். அவர்­ களில் எழுவர் சிறுவர். பிரிட்­டனைச் சேர்ந்த மனித உரிமை­கள் கண்­கா­ணிப்­புக் குழு இந்தத் தகவலை வெளி­யிட்­டது.

தொடரும் தாக்­கு­த­லால் தரை­மட்­ட­மா­கும் கட்டட இடி­பாடு­களில் சிக்கி மேலும் பலர் உயி­ரி­ழக்­கும் அபாயம் இருப்­ப­தால் பலி­யா­னோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் எனக் கூறப்­பட்­டது. வெள்­ளிக்­கிழமை நிகழ்ந்த கோரத் தாக்­கு­த­லில் குடிமைத் தற்­காப்பு அமைப்பின் நிலை­யங்களும் சேதமுற்றன. அந்தப் பகு­தி­யில் ஏற்­பட்­டுள்ள அழிவைக்­கண்டு குடிமைத் தற்­காப்பு அமைப்­பி­னரே மலைத்­துப்­போ­யுள்­ள­னர்.

கடந்த ஜூலை மாதத்­தி­லி­ருந்து கிழக்கு அலெப்­போ­வில் சுமார் 250,000 பேர் தொடர்ந்து முற்­றுகைக்கு உட்­பட்­டுள்­ள­னர். கிழக்கு அலெப்போவில் வசிப்­போர் போரா­ளி­களி­ட­மி­ருந்து வில­கி­யி­ருக்­கு­மா­றும் அவர்­கள் அர­சாங்கத்­தின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் பகு­தி­களுக்கு பாது­காப்­பா­கச் செல்ல வசதிகள் செய்து தரப்ப­டும் எனவும் சிரி­யா­வின் ராணுவம் குறிப்­பிட்­டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!