வா‌ஷிங்டனில் துப்பாக்கிக்காரன் கைது

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் வா‌ஷிங்டன் நகரில் உள்ள ஒரு பிரபல கடைத் தொகுதியில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றவன் என்று சந்தேகிக்கப்பட்ட நபரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்தச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். கைது செய்யப்பட்டுள்ள நபர் துருக்கியில் பிறந்தவரும் அமெரிக்க நிரந்தரவாசியுமான 20 வயது அர்கான் சிடின் என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். வா‌ஷிங்டனில் பர்லிங் டன் நகரில் உள்ள கடைத் தொகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த துப்பாக்கிக்காரன் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பெண்களும் ஓர் ஆட வரும் கொல்லப்பட்டனர். உயிரிழந் தவர்களில் ஆக இளவயதுடையவர் புற்றுநோயிலிருந்து உயிர் பிழைத்த 16 வயதுப் பெண் என்று கூறப்பட்டது.

இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பயங்கரவாதம் தொடர்பு டையது என்று கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறினர். துப்பாக்கிச் சூடு நடந்த அந்த கடைத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான கார் அடை யாளத்தைக் கொண்டு அர்கான் சிடின்தான் அந்த சந்தேக நபர் என்று அடையாளம் காணப்பட்ட தாக போலிசார் கூறினர்.

Loading...
Load next