பயணக் களைப்பால் ஆங் சான் சூச்சியின் உடல்நிலை பாதிப்பு

யங்கூன்: வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மியன்மார் திரும்பிய எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியின் உடல்நிலை பயணக் களைப்பால் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் கூறியது. பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்குப் பயணம் மேற் கொண்டிருந்த திருவாட்டி சூச்சி வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் சாப்பிடத் தவறியதால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

71 வயதாகும் ஆங் சான் சூச்சி அரசாங்க ஆலோசகராக இருப்பதால் பல முக்கிய பணி களை இடைவிடாமல் ஆற்றி வருகிறார். அவர் நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனக்காக ஒன்று, மனைவிகளுக்காக 19 என 20 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை மன்னர் மூன்றாம் ஸ்வதி வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம், காணொளி: ஸிலிக்காஸி என்பவரின் டுவிட்டர் பக்கம்

19 Nov 2019

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி