மலேசிய ஆயுதப் படையில் ஒரு விழுக்காட்டினருக்கு ஐஎஸ் தொடர்பு

கோலாலம்பூர்: மலேசிய ஆயுதப் படையினரில் ஒரு விழுக் காட்டினர்தான் ஐஎஸ் தொடர்பைக் கொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் ஹிசாமுதின் ஹுசேன் தெரிவித்துள்ளார். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்ற போதிலும் தற்காப்பு அமைச்சு இதனைக் கடுமையாகக் கருதுகிறது என்றும் பாதுகாப்புத் துறையினரிடையே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகள் பரவாமல் தடுக்க விரிவான நடவடிக்கைகளை எடுக்கும்படி தாம் உத்தரவிட் டிருப்பதாகவும் அமைச்சர் சொன் னார்.

இத்தகைய பயங்கரவாத குழுக்களில் ஆர்வம் காட்டுகிற மலேசிய ஆயுதப் படை வீரர்களைக் கண்டுபிடிக்கும் பணி ஆயுதப் படையின் சமயப் பிரிவு மற்றும் உளவுப்படைப் பிரிவு ஆகிய வற்றிடம் ஒப்படைக்கப்பட்டிருக் கிறது என்றும் திரு ஹிசாமுதின் கூறினார். அதேவேளையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செல் வாக்கிற்கு ஆட்பட்டுவிட்ட ஆயுதப் படை வீரர்களின் உண்மையான எண்ணிக்கை பற்றி அவர் எதுவும் வெளியிடவில்லை. இஸ்லாம் மற்றும் ஜிகாத்தின் உண்மையான பொருள் என்ன என்பதை ஆயுதப் படை வீரர்களுக்கு எடுத்துரைப்பது உள்பட பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் ஹிசாமுதின் சொன்னார். கோலாலம்பூரில் கருத்தரங்கு ஒன்றை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் பேசிய போது அவர் இதுபற்றிக் கூறினார். அந்த நான்கு நாள் கருத் தரங்கில் அமெரிக்கா, ஆஸதி ரேலியா, சீனா, ஜப்பான், இந்தோனீ சியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடு களின் மூத்த ராணுவ அதி காரிகளும் கலந்து கொள்கின் றனர்.