மெக்சிகோ சிட்டியில் டிரம்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மெக்சிகோ சிட்டி: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடவுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பிற்கு எதிராக மெக்சிகோ சிட்டியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மெக்சிகோவில் வசிக்கும் அமெரிக்கர்கள் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலி யுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மெக்சிகோ நாட்டவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பலர் டிரம்ப் மீது தாங்கள் கொண்டுள்ள சினத்தை வெளிப் படுத்தினர்.

மெக்சிகோ மக்களைப் பற்றி டிரம்ப் அடிக்கடி குறை கூறி வந்துள்ளார். மெக்சிகோ எல்லையில் பெரிய சுவர் எழுப்பப்போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் டிரம்பிற்கு எதிராக மெக்சிகோ சிட்டியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக மெக்சிகோ சிட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டிரம்ப் பற்றிய சுவரொட்டிக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் தங்கள் சினத்தை வெளிப்படுத்துகின்றனர். படம்: ஏஎஃப்பி