பிகேஆர் உதவித் தலைவருக்கு சிறைத் தண்டனை

கோலாலம்பூர்: தேச நிந்தனைக் குற்றம்சாட்டப்பட்ட பிகேஆர் உதவித் தலைவரான டியான் சுவாவுக்கு நேற்று மூன்று மாதச் சிறைத்தண்டனையும் 1,800 ரிங்கிட் அபராதமும் விதிக்கப் பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் தேச நிந்தனைக் கருத்துகளை வெளியிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங் கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் நோக்கத்தில் அவரது பேச்சில் கருத்துகள் இடம்பெற்றிருந்தன என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுல்கர்னைன் ஹசான் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் பொது நலனும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் டியான் சுவாவின் வழக்கறிஞர், தமது கட்சிக்காரர் மீது தவறு இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டியான் சுவா மீது கடந்த 2013ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அல் லது இரண்டும் விதிக்கப்படலாம். திரு டியான் சுவாவுக்கு 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஓராண்டுக்குமேல் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டிருந்தால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமலும் போயிருக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வென்றால், ஜோகூரின் தென்மேற்கே உள்ள குக்குப் பகுதிக்கும் சிங்கப்பூருக்கும் இடையே படகுச் சேவைகளைத் தொடங்க திட்டங்கள் இருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார். படம்: மலேமெயில், ஈசோப் மாட் இசா

15 Nov 2019

‘பக்கத்தான் ஹரப்பான் வென்றால் சிங்கப்பூருக்கும் ஜோகூரின் குக்குப் பகுதிக்கும் இடையே படகுச் சேவை 

நனைந்த துணியைப் பயன்படுத்தி தம்மால் முடிந்த வரை தீயை அணைக்க முயற்சி செய்யும் ஆடவர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புதர்த் தீயால் பல வீடுகள் அழிந்துவிட்டன. படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆஸ்திரேலியப் புதர்த் தீ: மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மேடானில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் பணிகளை இந்தோனீசியா முடுக்கிவிட்டுள்ளது. படம்: இபிஏ

15 Nov 2019

மனித வெடிகுண்டு தாக்குதல்: மேடானில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்