‌ஷிமோன் பெரசுக்கு அஞ்சலி

நோபல் பரிசு பெற்ற இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ‌ஷிமோன் பெரஸ் காலமானார். அவருக்கு வயது 93. டெல் அவிவில் அவர் கால மானதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை நேற்று முன்தினம் மேலும் மோசம் அடைந்தது. அதையடுத்து அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார். பாலஸ்தீனர்களுடன் அமைதி முயற்சியில் ஈடுபட்டதற்காக திரு ‌ஷிமோன் போற்றப்பட்டார். அப்போதைய பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துடன் அவர் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஓஸ்லோ அமைதி உடன் பாடு ஏற்படுவதற்கு வழி வகுத்தார்.

இதில் அவர் ஆற்றிய பங்கைப் பாராட்டும் வகையில் 1994ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கிடையே திரு ‌ஷிமோன் பெரசின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இள வரசர் சார்லஸ் உட்பட உலகத்தலைவர்களும் பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்ட இரங்கல் செய்தியில் அமைதிக்கான சாத்தியங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக் காதவர் என்று பாராட்டினார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வாழ்நாள் முழுவதும் தமது நாட்டுக்காக அயராது உழைத்தவர் என்று அவருக்குப் புகழாரம் சூட்டினார். கடந்த ஏப்ரல் மாதம் டெல் அவிவில் கடைசியாக அவரைச் சந்தித்ததாகக் கூறிய திரு லீ, அப்போது தம்மை அவர் இன் முகத்தோடு வரவேற்றதை நினைவுகூர்ந்தார். “இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத் துக்கும் இடையே அமைதி ஏற் படுத்த முடியும் என்பதை அவர் கடைசி வரை நம்பினார்,” என்று பேஸ்புக் பக்கத்தில் திரு லீ குறிப் பிட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் டெல் அவிவில் ‌ஷிமோன் பெரஸ் (வலம்) தம்மை அன்புடன் வரவேற்றதை பிரதமர் லீ சியன் லூங் நினைவுகூர்ந்தார். கோப்புப் படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதுகாப்புப் படையினர் கடுமையாக நடந்துகொண்டதில் காயமுற்ற ஒருவருக்கு உதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

கண்ணீர்ப் புகையால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை