சீனப் பெருஞ்சுவரின் கீழ் ரயில் நிலையம்

ரயில் நிலையத்தை உலக அதி சயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் சீனாவில் பார்வை யாளர்கள் அதிகம் வந்து செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது. சீனப்பெருஞ் சுவரைப் பார்வை யிடுவதற்கு நாள் தோறும் 30,000 பயணிகள் வருகின்றனர். புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன் னிட்டு அமைக்கப்படும் என்றும் சீனா கூறியது.

இந்த நிலையில் புதிய ரயில் நிலையம் குறித்துத் தகவல் தெரிவித்த சீன ரயில்வே துறை, “புதிய ரயில் நிலையம் சீன பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்குக் கீழே உருவாக்கப் படவுள்ளது. இதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பரப்பின் அளவு ஐந்து காற்பந்தாட்ட மைதானங் களுக்குச் சமமானது,” என்று கூறியது. இந்தப் புதிய ரயில் நிலையம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி உரு வாக்கப்படவுள்ளன. மேலும் இந்த ரயில் நிலையத் தால் சீனாவின் தொன்மையான அடையாளமான சீனப் பெருஞ் சுவருக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உருவாக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறும்போது தமது ஆதரவாளர்களுடன் காணப்படும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் (நடுவில்). படம்: இபிஏ

12 Nov 2019

தற்காப்பு வாதத்தை முன்வைக்க நஜிப்புக்கு உத்தரவு

ஹாங்காங்கின் சாய் வான் ஹோ பகுதியில் துப்பாக்கியைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் குறிவைக்கும் போலிஸ் அதிகாரி. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

ஹாங்காங் கலவரம் தீவிரம்

நடைபாலத்தில் ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது. படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

12 Nov 2019

ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது