முன்னைய எதிரியுடன் சேர்ந்து கோரிக்கை விடுத்த ஹில்லரி

டர்ஹாம்: ஜனநாயகக் கட்சியில் தமக்குப் போட்டியாக விளங்கிய பெர்னி சேண்டர்சுடன் மேடையில் தோன்றிய ஹில்லரி கிளிண்டன், தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்புக்கும் ஹில்லரி கிளிண்டனுக்கும் இடையே போட்டி சூடுபிடித்திருக்கும் வேளையில் இளம் வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஹில்லரி இறங்கியிருக்கிறார்.

நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக் கழக வளாகத்தில் பேசிய ஹில்லரி, தேர்தலில் வெற்றி பெற்றால் கல் லூரிக் கட்டணங்களைக் கட்டுபடி யாகக் கூடிய வகையில் வைத் திருப்பேன்,” என்றார். ஆண்டுக்கு 125,000 அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு பொதுக் கல்லூரிகளில் கட்டண மில்லா கல்விக்கு ஏற்பாடு செய்யப் படும் என்றும் அவர் உறுதியளித் தார். ஜனநாயகக் கட்சியின் வேட் பாளர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெர்னி சேண்டர்ஸ் ஏராளமான இளம் வாக்காளர் களை ஈர்த்திருந்தார். இதனால் பெர்னி சேண்டர்சுடன் சேர்ந்து கூட்டாக இளம் வாக்காளர் களின் வாக்குகளைச் சேகரிக்கும் பிரசாரத்தை ஹில்லரி மேற் கொண்டுள்ளார்.

நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் பெர்னி சேண்டர்சுடன் இளையர்களிடம் பேசிய ஹில்லரி கிளிண்டன். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next