தாய்லாந்தில் இருவருக்கு ஸிக்கா தொடர்பான நோய்

பேங்காக்: தாய்லாந்தில் இரு வருக்கு ஸிக்கா தொடர்பான மைக்ரோஸிஃபலி நோய் பாதித் திருப்பதை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தி யுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவிலேயே ஸிக்கா தொடர்பான நோய் பாதித்துள்ள முதல் சம்பவம் இது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் ஸிக்கா தொடர்பான நோயால் பாதிக் கப்பட்ட இரு குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்திருப்பதாக நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஆலோசகர் பிரசர்ட் தோங்சரோன் பேங்காக்கில் செய்தியாளர்களிடம் கூறினார். தாய்லாந்தில் எந்தப் பகுதியில் அந்நோய் கண்டு பிடிக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா கிருமி தொற்றுவதால் மைக்ரோஸிஃபலி நோய் பாதிக்கக் கூடும் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்கிருமி தொற்றிய கர்ப் பிணிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பார்கள். சிறிய தலைகளுடன் பிறக்கும் அக்குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் அந்நோய் வெகுவாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸிக்கா கிருமிக்கும் மைக்ரோஸிஃபலி நோய்க்கும் தொடர்பு இருப்பது சென்ற ஆண்டு பிரேசிலில் கண்டுபிடிக் கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹங் ஹோம் பகுதியில் உள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டியிலும் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை

ரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட தாக்குதலில் அகேல் ஸைனல் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: தி ஸ்டார்

13 Nov 2019

‘ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்’

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளோட்டி எருமை மாட்டின்மீது மோதினார். படம்: தி ஸ்டார்

13 Nov 2019

எருமை மாட்டின்மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்