பாகிஸ்தானை உலுக்கிய 5.5 ரிக்டர் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஸ்வாட் பள்ளத்தாக்கின் மிங்கோரா நகரின் கிழக்கே 117 கி.மீ. தொலைவில் 43.4 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்த தாக அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதே போல் இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி யிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவாகியிருந்ததாக தெரி விக்கப்பட்டது.

இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் மக்கள் அச்சம் அடைவதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.