ஆட்கடத்தலைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை

கோலாலம்பூர்: சாபா மாநிலத்தில் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுத்து நிறுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தியுள்ளார். அந்த மாநிலத்தில் ஆட் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்குக் காரணம் அந்த மாநிலத்தின் பரந்து விரிந்த கடல் எல்லைகளும் தகவல்கள் கசிவதாலுமே என்று அவர் சொன்னார். ஆனால் இப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பாதுகாப்புப் படை யினர் அதிகமான ஒருங் கிணைந்த நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் இருப்பதற்கு அவற்றைக் காரணமாகக் கூற முடியாது என்று திரு நஜிப் கூறினார். எல்லைகளில் உள்ள எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் பாதுகாப்புப் படையினரை நிறுத்து வது என்பது இயலாத காரியம் என்று அவர் சொன்னார். எந்த நாடும், வளர்ச்சி அடைந்த நாடுகள்கூட இதனைச் செய்ய முடியாது என்று திரு நஜிப் சொன்னார்.

இருப்பினும் பாதுகாப்புப் படை யினர், ஆட்கடத்தல் சம்பவங் களைத் தடுத்து நிறுத்த புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பு வதாக அவர் சொன்னார். அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் திரு நஜிப், செய்தியாளர்களிடம் பேசி னார். ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை சாபா மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நஜிப் கேட்டுக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!