அலெப்போவில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் போராளி கள் வசம் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற சிரியா ராணுவம் கடுமையாகச் சண்டையிட்டு வரும் வேளையில் அலெப்போவின் வடபகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கி வருவதாக போராளிகள் தரப்பும் கண் காணிப்புக் குழு ஒன்றும் தெரிவித்துள்ளன. அலெப்போ நகருக்குள் முன்னேறிச் செல்வதாக ராணுவம் கூறியுள்ள போதிலும் போராளிகள் அதனை மறுத்துள்ளனர். ராணுவத் தினரை எதிர்த்து தாங்கள் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாக போராளிகள் தெரிவித் துள்ளனர். ரஷ்ய விமானங்களின் குண்டு வீச்சு உள்ளிட்ட சிரியா ராணுவத் தின் விமானத் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் உயிரிழந்த தாகக் கூறப்பட்டது. சிரியா ராணுவம் பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்கி வருவதாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

சுமார் 250,000 பேர் வசிக்கும் அலெப்போ நகரைக் கைப்பற்ற சிரியா ராணுவம் ரஷ்யாவின் ஆதரவுடன் 10 நாட்களுக்கு முன்பு தாக்குதலைத் தொடங் கியது. சிரியாவின் மிகப் பெரிய நகரமாகவும் வர்த்தக மையமாகவும் விளங்கிய அலெப்போ நகரம் கடந்த நான்கு ஆண்டுகளாக தற்போது பிளவுபட்டுள்ளது. அந்நகரின் ஒரு பகுதி அரசாங்கக் கட்டுப்பாட்டிலும் மற்றப் பகுதி எதிர்த் தரப்பினர் வசமும் உள்ளன. இந்நிலையில் சிரியாவில் ரஷ்யா அதன் ராணுவ நட வடிக்கையை அதிகரித்திருப்பதை அமெரிக்கா கடுமையாகச் சாடி யுள்ளது. ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை மிதவாதப் போராளிகளை தீவிரவாதிகளின் பிடியில் சிக்க வழிவகுக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் தெரி வித்துள்ளார். ரஷ்யாவின் இத் தகைய செயலால் அந்நாட்டு டனான ஒத்துழைப்பு முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அமெரிக்கா மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தை வெளியேற்ற போராளி களை ஊக்குவிக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது.

அலெப்போ நகரில் அரசாங்கப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரை தொண்டூழியர்கள் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். அரசாங்கப் படையினருக்கு ஆதரவாக ரஷ்ய விமானங்களும் குண்டுகளை வீசித் தாக்கி வருவதால் அலெப்போ நகரம் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. படம்: ஏஎஃப்பி

Loading...
Load next