நாடு முழுவதும் பிரசாரத்தை தொடங்கியது பெர்சே

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் நவம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூரில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ள பெர்சே அமைப்பு அதற்கான பிரசாரத்தை நேற்று தொடங்கியது. இந்தப் பிரசாரம் அடுத்த 7 வாரங்களுக்கு நீடிக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 246 இடங்களில் பிரசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் சாரா அமைப்புகளுடன் சேர்ந்து பெர்சே இந்த பிரசாரத்தை செய்யவுள்ளது. நேற்று கோலாலம்பூரில் ஆறு இடங்களில் பெர்சே ஆதரவாளர்கள் ஒன்றுகூடினர். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பேரணியில் மலேசியர்கள் பலர் கலந்துகொள்ள வேண்டும் என்று பெர்சே அழைப்பு விடுத்துள்ளது. பெர்சே அமைப்பு 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய இதுபோன்ற பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விதிமீறுவோருக்கு 2009 போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் 500,000 ரூப்பியா (S$48) அபராதமும் இரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். படம்: தி ஜகார்த்தா போஸ்ட் / ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

15 Nov 2019

ஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை

துப்பாக்கியில் இருந்த கடைசி தோட்டாவால் தன்னையே மாணவன் சுட்டுக்கொண்டான். படம்: ஸூமா / டிபிஏ

15 Nov 2019

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் மரணம், மூவர் காயம்

பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், ஆங்கோர் ஆலயத்தைச் சுற்றி வர யானைச் சவாரியைப் பெரிதும் விரும்புகின்றனர். படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆங்கோர் வாட் ஆலயத்தில் யானைச் சவாரி ரத்து