கருத்துக் கணிப்பில் டிரம்பைவிட முன்னிலையில் ஹில்லரி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தெடர்பான அண்மைய கருத்துக் கணிப்பில், ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டன், டிரம்பை விட 3 விழுக்காடு வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹில்லரிக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் தொழிலதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வெற்றி பெறுவது யார் என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஹில்லரி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். கடந்த மாதம் நடந்த நேரடி விவாதத்தற்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் டிரம்பைவிட ஹில்லரிக்கே அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் வரும் தேர்தலில் இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் ஹில்லரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை அவருக்குச் சேரும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்

உறவினர்களையும் நண்பர்களையும் இழந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத மக்கள். படம்: இபிஏ

19 Nov 2019

காற்பந்து ரசிகர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடியது. படம்: இணையம்

19 Nov 2019

அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா