அரசியல் நிதியளிப்பு பரிந்துரைகளை எதிரணியினர் ஏற்கவேண்டும்: மஇகா

அரசியல் நிதியளிப்பை முறைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரிந்துரை களை எதிர்க்கட்சியினரும் ஏற்க வேண்டும் என மலேசிய இந்தியர் காங்கிரசின் பொருளாளர் எஸ். வேள்பாரி (படம்) தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை யில், "தேசிய முன்னணிக் கான அரசியல் நிதியளிப்பில் அரசாங்கம் வெளிப்படையாக இருப்பதையே இப்பரிந் துரைகள் உணர்த்துகின்றன. "தேசிய முன்னணிக்கு யார் மூலம் நிதியளிக்கப்படுகிறது என்பதை மறைப் பதற்கு ஒன்றுமில்லை," என்று தெரி வித்துள்ளார்.

அரசியல் நன்கொடை, செலவுச் சட்டத்தின்கீழ் கொண்டு வர உத்தேசிக் கப்பட்டுள்ள சட்டங்களை எதிர்த்தரப் பினரும் ஏற்பார்கள் என்று தாம் நம்புவதாக வேள்பாரி குறிப்பிட்டுள்ளார். அச்சட்டப் பரிந்துரைகள் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அவற்றை எதிர்த்தரப்பினரும் ஏற்பது நல்லது என்றார் அவர். புதிய உத்தேச சட்டத்தை ஏற்கப் போவதில்லை என்பதைக் குறிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் தலை வர்கள் அறிக்கை விடுத்து வருவதை வேள்பாரி சுட்டி னார்.

மலேசியாவுக்கு வெளி யிலிருந்து அரசியல் கட்சி களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்கொடை வழங்கப்படுவதைத் தடுக்க அரசியல் நிதியளிப்பு மீதான தேசிய ஆலோசனைக் குழு அண்மையில் 32 பரிந்துரைகளைத் தெரிவித்திருந்தது. குழுவின் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான பால் லோ நேற்று இது குறித்துக் கூறுகையில், எதிர்த்தரப்பினர் தடுத்தாலும் புதிய சட்டங்களைத் தடுக்க முடியாது என்றார். "அரசியல் நிதியளிப்பு மீது கட்டுப் பாடுகளைக் கொண்டிராத ஒரு சில நாடுகளில் மலேசியாவும் ஒன்று. அத னால் பண அரசியல் பெருகிவிட்டது. அது ஆரோக்கியமானதல்ல. "அரசியல் நிதியளிப்பு முறைப்படுத்தப் பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். பணம் இல்லாமல் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய இயலாது. அதேவேளை பண அரசியலையும் தடுத் தாக வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது," என்றார் பால் லோ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!