கூடுதல் இழப்பீடு கோரி வியட்னாமியர்கள் போராட்டம்

ஹனோய்: விஷம்கொண்ட கழி­வு­கள் கடலில் கலந்து அதிக அளவில் மீன்கள் இறந்­து­போ­வ­தால் தைவானில் இருக்­கும் ஃபார்­மோசா ஸ்டீல் உற்­பத்தி நிறு­வ­னம் ஒன்றின் செயல்­பாட்டை நிறுத்­து­மாறு ஆயி­ரக்­க­ணக்­கான வியட்னா­மி­யர்­கள் நேற்று போராட்­டத்­தில் குதித்­த­னர். கய் ஆனில் இருக்­கும் அந்த நிறு­வ­னத்தைச் சூழ்ந்த போராட்­டக்­கா­ரர்­கள் மதில்­களின் மீது ஏறியும் பதாகை­களை ஏந்­தி­யும் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். கத்­தோ­லிக்க சம­ய­குரு ஒரு­வ­ரின் தலைமை­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்ட அவர்­கள் பைபிள் வாச­கங்களை­யும் உச்­ச­ரித்­ததைக் காட்டும் காணொ­ளி­கள் இணை­யத்­தில் வலம்­ வந்தன. மீன்பிடித் தொழிலே பிர­தா­ன­மாக இருந்­து­வ­ரும் வியட்னா­மின் கடற்­கரை கிரா­மங்களில் சென்ற ஏப்ரல் மாதத்­தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மீன்களும் பிற கடல்­வாழ் உயி­ரி­னங்களும் செத்து கரை ஒதுங்­கின.

நாட்டின் மோசமான சுற்­றுச்­சூ­ழல் பேரி­டர்­களில் ஒன்றாக அது கரு­தப்­பட்­டது. பல பில்­லி­யன் மதிப்­பி­லான ஸ்டீல் உற்­பத்தி நிறு­வ­னம் ஒன்றை ஹா டின் பகு­தி­யில் தைவானின் ஃபார்­மோசா நிறு­வ­னம் உரு­வாக்கி வரு­கிறது. மீன்களின் இறப்­புக்கு அந்த நிறு­வ­னம் கழி­வு­களைக் கடலில் வெளி­யேற்­று­வதே காரணம் என்று கூறப்­பட்டு அதற்கு $682 மில்­லி­யன் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. மீன்கள் இறந்த­தால் பாதிக்­கப்­பட்ட மீன­வர்­களுக்கு 130 முதல் 1,600 அமெ­ரிக்க டாலர்­கள் வரை உதவித்­தொகை­யாக வழங்கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்தது. நேற்று போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் கூடுதல் இழப்­பீடு கோரினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!