போராளிகளுடனான அமைதி உடன்பாடு; கொலம்பிய மக்கள் நிராகரிப்பு

கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் போராளிகள் இயக்கத்திற்கும் இடையே கா-ணப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த அமைதி உடன்பாட்டை அந்நாட்டு மக்கள் மிகவும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிராகரித் துள்ளனர். அந்த உடன்பாடு குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கொலம்பிய மக்கள் பலரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 13 மில்லியனுக்கு அதிகமானோர் வாக்களித்தனர். ஆனால், 63,000 வாக்குகள் வித்தியாசத் தில் உடன்பாட்டை நிராகரிக்கும் தரப்பு வென்றது. இந்த அமைதி உடன்பாடு கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் அந்த அமைதி உடன்பாட்டை நிராகரித்துள் ளனர்.

வாக்கெடுப்பு முடிவுகள் அந்த உடன்பாட்டை எதிர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் அந்த உடன் பாட்டை ஆதரிப்பவர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள் ளன. கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் ஃபார்க் தலைவரோடு இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட கொலம்பிய அதிபர் யுவான் மெனுவல் சாண்டோஸ், தான் பதவி விலகப் போவதில்லை என்று கூறி யிருக்கிறார். மக்களின் இந்த முடிவு வருத்தம் தருவதாக ஃபார்க் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Loading...
Load next