ஆப்கானில் குண்டூஸ் நகரைக் கைப்பற்ற தலிபான் தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் வடக்கே உள்ள குண்டூஸ் நகரைக் கைப்பற்ற தலிபான் போராளிகள் ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரின் நாலா பக்கங்களிலிருந்தும் போராளிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. அத்தாக்குதலை எதிர்த்து அரசாங்கப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக மாநில ஆளுநரின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு குண்டூஸ் நகரம் தலிபான் போராளிகள் வசம் வீழ்ந்தது. ஆனால், அரசாங்கப் படையினர் அதனை மீண்டும் கைப்பற்றினர். குண்டூஸ் பகுதியிலும், தெற்கில் உள்ள ஹெல்மண்ட் பகுதியிலும் போராளிகள் முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரின் பல பகுதிகளை போராளிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படும் வேளையில் அவர்களை எதிர்த்து அரசாங்கப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போராளிகளிடம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உறுதியான நடவடிக்கை களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கான் அரசாங்கம் கூறுகிறது. ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நேட்டோ படைகள் உதவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனக்காக ஒன்று, மனைவிகளுக்காக 19 என 20 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை மன்னர் மூன்றாம் ஸ்வதி வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம், காணொளி: ஸிலிக்காஸி என்பவரின் டுவிட்டர் பக்கம்

19 Nov 2019

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி