ஜப்பானில் சூறாவளி; விமானச் சேவைகள் ரத்து

தோக்கியோ: ஜப்பானின் தென் பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசுவதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சூறாவளி காரணமாக ஜப்பானின் இரு பெரிய விமான நிறுவனங்களான ஆல் நிப்பன் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை அவற்றின் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று நேற்று காலை ஒகினாவா தீவின் தலைநகரைத் தாக்கத் தொடங்கியதாக ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரி வித்தது.

பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் நேற்று ஒகினாவா தீவில் உள்ள நஹா விமான நிலையம் மூடப்பட்டது. இந்த விமான நிலையம் இன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீவில் உள்ள தொடக்கப் பள்ளிக் கூடங்களும் உயர்நிலைப் பள்ளிகளும் மூடப் பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின. சூறாவளிக் காற்று வடகிழக்கு நோக்கி வீசுவதால் ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்‌ஷுவை இப்புயல் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியின்போது கடல் அலைகளின் சீற்றம் அதி கரிக்கலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை

நாடாளுமன்றக்  கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

22 Nov 2019

கூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்