வடகரோலினா தேவாலயத்திற்கு ஹில்லரி வருகை

வடகரோலினா தேவாலயத்திற்கு ஹில்லரி வருகை

1 mins read
51e9bdff-be2e-4978-bc0c-64313f1e2dd2
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந் துள்ள வேளையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டன் ஞாயிற்றுக் கிழமை வடகரோலினாவில் உள்ள ஆப்ரிக்க அமெரிக்கர்களின் தேவாலயத்திற்குச் சென்றிருந்தார். அங்கு நடந்த பிரார்த்தனையில் கலந்துகொண்ட திருவாட்டி ஹில்லரி, துப்பாக்கி வன்முறைச் சம்வங்களில் பலியான கெய்த் லேமண்ட் ஸ்கூட் உள்ளிட்ட கறுப் பினத்தவர்களின் குடும்பத் தினருக்காக பிரார்த்தனை செய் தார்.

சார்லட் நகரில் உள்ள தேவாலயத்தில் உரையாற்றிய ஹில்லரி, துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் கடுமையான துப்பாக்கிச் சட்டம் நடப்புக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி, வடகரோலினா மாநிலத்தில் சார்லட் நகரில் உள்ள தேவாலயத்திற்கு வருகை புரிந்தார். அங்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ஒன்பது வயதுச் சிறுமியுடன் உரையாடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்