போதைப்பொருள் வைத்திருந்த சிங்கப்பூரர் இந்தோனீசியாவில் கைது

ஜகார்த்தா: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக இந்தோனீசிய விமான நிலைய அதிகாரிகள் சிங்கப்பூரர் ஒரு வரைக் கைது செய்துள்ளனர். இவர் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண் டாவது சிங்கப்பூரர் ஆவார். பாலி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கோ தியாம் ஆன் டெஸ்மண்ட் என்று அடையாளம் காணப் பட்டுள்ள அந்த ஆடவரிடம் 1.47 கிராம் மெதம்ஃபெடமினும் இரண்டு எக்ஸ்டசி மாத்திரை களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள கோ, ஒரு விமானச் சிப்பந்தி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கோ விடுமுறைக்காக பாலி வந்திருந்ததால் அவர் எந்த விமானச் சேவையைச் சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப் படவில்லை. அவரது பணப்பையில் கண்டெடுக்கப்பட்ட போதைப் பொருளை கோ சிங்கப்பூரில் வாங்கியதாக அதிகாரிகள் கூறி னர். வாங்கிய போதைப்பொருளில் சிலவற்றை அவர் சிங்கப்பூரில் உட்கொண்டதாகவும் அறியப்படு கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோவுக்கு ஐந்திலிருந்து பதினைந்து ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை

நாடாளுமன்றக்  கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

22 Nov 2019

கூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்